2017ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி, இந்தூரில் இந்தியா, இலங்கை இடையில் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
இந்திய அணியில் ஓபனர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். பிட்ச் தட்டையாக இருந்ததால், பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. இதன்காரணமாக, சுலபமாக சேஸ் செய்துவிட முடியும் என்பதால், முதலில் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே காட்டடி அடிக்க துவங்கியது.
குறிப்பாக, இந்திய அணி 12ஆவது ஓவர்வரை விக்கெட் எதுவும் இழக்கவில்லை. ரோஹித் ஷர்மா வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து அவர், 43 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர் இலங்கைக்கு எதிராக பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டுமுறை (264, 208*) இரட்டை சதம் அடித்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டிலும் 35 பந்துகளில் சதம் அடித்தது சாதனையாகத் தொடர்கிறது.பாபர் அசாம் பெஸ்ட் பேட்ஸ்மேன்…ஆனா இதுல ரெண்டாவது இடம்தான்: ஷாஹீன் அப்ரீதி அதிரடி!

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ராகுல் 49 பந்துகளில் 8 சிக்ஸர்கள் விளாசி 89 ரன்கள் குவித்து நடையைக் கட்டினார். அடுத்து மகேந்திரசிங் தோனியும் 28 (21) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 260 ரன்களை குவித்து அசத்தியது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணி, வெற்றிக்காக தீவிரமாகப் போராடியது. ஓபனர் தராங்கா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து குஷல் பெரேரா 37 பந்துகளில் 7 சிக்ஸர்கள் விளாசி 77 ரன்கள் குவித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். இருப்பினும் அடுத்து வந்தவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், இலங்கை அணி 17.2 ஓவர்கள் முடிவில் 172/10 ரன்கள் சேர்த்து, 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
யுஜ்வேந்திர சாஹல் 4/52, குல்தீப் யாதவ் 3/52 ஆகியோர் விக்கெட்களை குவித்தனர்.