Motivational Tales
oi-G Uma
சென்னை: வாழ்க்கையில் நிறையப் பேருக்கு உண்மையான அன்பு எது என்பதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. உண்மையான அன்பு என்பது பிறர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டும் அல்ல.. நம் மீது அன்பு செலுத்தப்படுவதிலும் அது அடங்கியிருக்கிறது. இது பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் பாசமும் கூட.
பரஸ்பர அன்பினால் கணவன் மனைவிக்கு இடையே காதல் உண்டாகும். ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்தும் போது அதன் சுகமே தனி தான். உனக்குப் பிடிக்குமே என்று இதை வாங்கி வந்தேன் என்ற வாக்கியத்துக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதற்கு அடிமை. நம்மைக் கேட்கமாலேயே நமக்குப் பிடித்த விஷயத்தை ஒருவர் தெரிந்துக் கொண்டு நமக்காக அதை செய்கிறார் என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அன்பு காட்டும் மனம் ஆண்டவன் இருக்கும் இடமாகும். அன்போடு உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் உணவு தயாரிக்கும் போது அதன் சுவை மேலும் கூடுகிறது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும்போது நம் மனமும் அமைதி பெறுகிறது. பெரிய சிக்கல் வரும்போது கூட ஆறுதலாக நம்மை அரவணைக்க அன்பு காட்ட ஒருவர் இருந்தால் போதும் எந்த சிக்கலையும் எளிதில் தீர்த்து விடலாம்.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள். அன்னையின் பாசத்திற்கு எல்லா ஜீவராசிகளும் அடிமை. என் பிள்ளைக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்பவள் அன்னை மட்டுமே. உங்களுக்குப் பிடித்தவரிடம் அன்பு காட்டுங்கள். பாசத்திற்காக ஏங்கும் உங்கள் பெற்றோர்களிடம் அன்பு காட்டுங்கள். உண்மையான அன்பிற்கும் காதலுக்கும் உயிர் உண்டு.
உங்கள் துணையை நேசியுங்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல உங்கள் உறவினர்களையும் நேசியுங்கள். உள்ளத்தால் செலுத்தும் அன்பே உண்மையான அன்பு ஆகும். பரஸ்பர அன்பு மட்டுமே வாழ்க்கையை எப்போதும் மகிழச்சியாக வைத்திருக்கும். மற்றவரிடம் அன்பு காட்டுங்கள்.
English abstract
What’s the actual love , which is the million dollor query.