பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் உறவினர்கள் வருகை தருகிறார்கள் என்பதும் போட்டியாளர்கள் மிகவும் சந்தோசத்துடன் உறவினர்களை கட்டிப்பிடித்து ஆனந்தமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பாவனியின் அம்மா மற்றும் சகோதரிகள் வந்த நிலையில் அடுத்த புரமோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் காட்சிகள் உள்ளன
அம்மாவை பார்த்ததும் பிரியங்கா துள்ளிகுதித்து ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விடும் காட்சிகளும் அதேபோல் சகோதரரை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து சந்தோசப்படும் காட்சிகளும் உள்ளன
மேலும் பிரியங்காவின் அம்மாவிடம் தாமரை, அக்ஷரா உள்பட அனைவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். இந்த புரமோ வீடியோவுக்கு ‘வலிமை’ படத்தின் ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ என்ற பாடல் பின்னணியாக ஒலிப்பது மிகப்பொருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
#Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/r3LMAtsG5t
— Vijay Tv (@vijaytelevision) December 23, 2021