டெஸ்ட் போட்டியில் மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஜாஸ் படேல், இப்போது டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம் என்பது நியூசிலாந்தின் விசித்திரமான செல்கஷன் கொள்கையைக் காட்டுகிறது.
ஜனவரி 1ம் தேதி நியூசிலாந்து-வங்கதேசம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது, இதற்கான நியூசிலாந்து அணியில் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் கான்பூர் ஹீரோ ரச்சின் ரவீந்திரா மட்டுமே ஒரே ஸ்பின்னர். வேகபந்து வீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், சவுதி, கைல் ஜேமிசன், வாக்னர், ஹென்றி என்று குவித்துள்ளனர்.
வங்கதேசத்தை வேகத்தில் அடித்துக் கட்டிப்போட முடிவெடுத்துள்ளது நியூசிலாந்து, ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆம்புலன்ஸில் வந்தது வங்கதேச வீரர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது பாகிஸ்தான் வேக, சுழல் கூட்டணியில் தரைமட்டமான வங்கதேசம் நியூசிலாந்தின் கிரீன் டாப்பில் ஆடவேண்டும், கிழிஞ்சிடும்!!.
2 டெஸ்ட் போட்டிகள் மவுண்ட் மாங்கனுய் மற்றும் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது, எதற்கும் வங்கதேசம் நல்ல ஆர்த்தோ மருத்துவரையும் கூட அனுப்புவது நல்லது.
அஜாஸ் படேலை உட்கார வைத்தது பற்றி நியூசிலாந்து கோச் கேரி ஸ்டெட் கூறும்போது, “இந்தியாவில் சாதனை படைத்த அஜாஸ் படேலுக்காக வருந்துகிறேன். நாங்கள் எப்பவும் பந்தயத்துக்கு ஏற்ற குதிரை என்ற செலக்ஷன் பாலிசி உள்ளவர்கள். உள்நாட்டு பிட்ச்களுக்குத் தகுந்தவாறு தேர்வு செய்வோம்” என்றார்.
முழங்கை காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இல்லையாதலால் டாம் லேதம்தான் கேப்டன்.
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் வெண்கலத்துடன் இந்தியா முடிந்தது ஏன்?
நியூசிலாந்து அணி: டாம் லேதம், டாம் பிளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிகலஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.