இன்று குடியரசு தின விழா.. சுதந்திர தாகத்தைத் தணித்த தியாக சீலர்களின் தியாகங்கள் என்றென்றைக்கும் நினைவில் வைத்துப் போராட்டப்பட வேண்டியது.. ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்.. குடியரசைக் காப்போம்.
இன்று அனைவரும் சுதந்திரமாக வெளியே செல்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கானோரின் தியாகம் தான் காரணம். இருநூறு வருடங்களாக ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம். பல்வேறு போராட்டங்கள் பல தியாகங்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம். காந்தியடிகள் அறவழியில் சுதந்திரத்திற்காகப் போராடினார். ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் வெள்ளையனே வெளியேறு என்று முழங்கினார் காந்தி. தண்டி யாத்திரை செய்து தன்னுடைய எதிர்ப்பை ஆங்கிலேயருக்குத் தெரிவித்தார்.
தன் தாய்நாட்டைக் காப்பதற்காக தன்னுயிரையும் துச்சமென எண்ணினார் கொடி காத்த குமரன் அவர்கள். தன் பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் பாரதியார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டனர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் லாலாலஜபதி ராய் சர்தார் வல்லபாய் படேல் போன்றோரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாடி பல்லாயிரக்கணக்கானோர் தன் உயிரைத் தியாகம் செய்து நம் நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்று தந்தனர். இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் தான் நாட்டை ஆள்கிறார்கள். குடியரசு தினத்தன்று சுதந்திரப்போராட்டத் தியாகிகளை நினைவுகூர்ந்து தேசியக்கொடியோடு அவர்களுக்கும் வணக்கம் செலுத்துவோம். ஜெய் ஹிந்த்.