மோடி ட்விட்:
இந்நிலையில், இதனைத் தொடர்ந்து பிசிசிஐ முன்னாள் நிர்வாகி லலித் மோடி, ஒரு ட்விட்டை வெளியிட்டு கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பினார். அதில், “பந்தய நிறுவனங்களும் ஐபிஎல் அணியை வாங்கலாம் என நினைக்கிறேன். இது புதிய விதிமுறையாக இருக்க கூடும். அணியை வாங்கும் தகுதியுடைய ஒருவர், பெரிய பந்தய நிறுவனத்தை வைத்திருக்கிறார். அடுத்தது என்ன? பிசிசிஐ தனது வேலையை சரியாக செய்யவில்லை…இதில் ஊழல் தடுப்பு குழு என்ன செய்யப் போகிறது?” என புதிருடன் பதிவிட்டார்.
IND vs SA: ‘முதல் டெஸ்ட்’..தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்: வாய்ப்பு பிரகாசம்!
இதனைத் தொடர்ந்து, சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் சில பந்தய (சூதாட்ட) நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது என தகவல் வெளியானது. உடனே அந்த நிறுவனத்திடம் பிசிசிஐ விசாரணையை துவங்கியது. இதனால், அகமதாபாத் அணி வேறு நபருக்கு கைமாற அதிக வாய்ப்பிருக்கிறது என தகவல் வெளியாகி வந்த நிலையில், அப்படியெல்லாம் இல்லை, அகமதாபாத் அணி எந்த சூதாட்ட நிறுவனத்துடனும் தொடர்பில் இல்லை என பிசிசிஐ விளக்கமாகத் தெரிவித்துவிட்டது. மேலும், சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தால், உடனே அணிக்கு தடைவிதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
இதனால், அகமதாபாத் அணி 2 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்க இருந்த தடை நீங்கியுள்ளது. டிசம்பர் 30ஆம் தேதிதான் கடைசி நாள். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 7,8ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இருக்கும் 8 அணிகளும் பிசிசிஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு, 4 வீரர்கள் வரை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.