Motivational Tales
oi-G Uma
பெரும் சோகத்தை ஏற்படுத்திய வடுக்களுடன் ஒரு வழியாக புறப்பட்டுப் போய் விட்டது 2020.. இதோ பிறந்து விட்டது இனிய 21.. இந்த வருடத்திலாவது கடந்த வருடத்தின் அத்தனை கஷ்டங்களுக்கும் நல்ல மருந்து கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு விசேஷம்தான்.. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நம்மை பாடாய்ப்படுத்தி விட்டது. இந்த நிலை 2021ம் ஆண்டிலாவது மறையட்டும்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் கடந்த ஆம் ஆண்டு நாம் வீட்டிற்குள்ளேயே இருந்தோம். நம்முடைய வாழ்வாதாரமே முடக்கப்பட்டு விட்டது இந்த கொரோனாவால். 2021ஆம் ஆண்டிலாவது கொரோனா அரக்கன் ஒழிந்து வெகு விரைவில் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக நம் நாட்டை உலா வருவோம். சிறகடித்துப் பறக்க வேண்டிய இளஞ்சிறார்கள் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். இந்த 2021ஆம் ஆண்டிலாவது அவர்கள் ஆன்லைனில் நேரம் செலவிடாமல் நேரடியாக பள்ளிககுச் சென்று நண்பர்களோடு அளவளாவ வேண்டும்.
முடங்கிய தொழில்கள் எல்லாம் இந்த 2021ஆம் ஆண்டில் மேன்மை அடையட்டும். குடும்பத்தில் இருக்கும் சின்ன சின்ன சச்சரவுகள் நீங்கி இன்ப ஔி வீசட்டும். நீங்கள் நினைத்தவையெல்லாம் இந்த ஆண்டிலாவது நிறைவேறட்டும். மக்கள் இல்லாமல் நடந்த கோயில் திருவிழாக்கள் எல்லாம் வரும் 2021ஆம் ஆண்டிலாவது மக்கள் கூட்டத்தோடு நடக்கட்டும்.
கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..!
எத்தனையோ சோதனைகளை 2020ஆம் ஆண்டு நாம் பார்த்து விட்டோம். அந்த சோதனைகள் எல்லாம் மறைந்து அனைவரும் இந்த 2021ஆம் ஆண்டு மகிழ்ச்சியோடு வாழட்டும். உங்கள் இலக்குகளை இந்த புத்தாண்டில் அடைவதற்குத் திட்டமிடுங்கள். உங்கள் கெட்ட பழக்கம் ஏதேனும் ஒன்றை இந்த புத்தாண்டில் இருந்து விட்டுவிடுங்கள்.
இயல்பு வாழ்க்கை மீண்டும் வர வேண்டும். சிறார்கள் சிறகடித்துப் பறக்க வேண்டும் தொழில்கள் மேன்மையடைய வேண்டும் அனைவரும் பசியாற வேண்டும் நோய் நொடியின்றி நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் இந்த புத்தாண்டில். 2020க்கு குட்பை சொல்லுங்க புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராகுங்க. நன்மைகளை அள்ளித் தரும் நியூஇயர் வந்தாச்சு. விஷ் யூ எ ஹாப்பி நியூஇயர்.
English abstract
Glad new yr 2021 to all and sundry.