Jokes
oi-Aravamudhan
டெல்லி: எந்த ஒரு சிறிய சம்பவத்தையும் கிண்டல் செய்து ஜோக்குகள், மீம்ஸ் வெளியிடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை ரசிக்கக் கூடியதாகவும், சிரிக்கக் கூடியதாகவும் உள்ளது. சிலது சிந்திக்கவும் வைக்கிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அப்போது, நீதிமன்றத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், நீதிபதி ஏ.கே. சிக்ரி, ஒரு ஜோக்கை கூறினார். 116 எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் ஓனர் தன்னை முதல்வராக்கும்படி கூறும் ஜோக் வாட்ஸ்ஆப்பில் வந்தது என்று சிக்ரி கூறினார். அந்த ஜோக்கயும் அவர் கூறினார்.
“ஹலோ, கவர்னர் ஆபீசா”
“ஆமாம்”
“என்னிடம் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்னை முதல்வராக்குவீர்களா”
“யாருங்க நீங்க”
“அந்த எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் ஹோட்டலின் உரிமையாளர்”
இது வெறும் ஜோக்தான் என்று நீதிபதி குறிப்பிட்ட விசாரணையை முடித்தனர். கர்நாடகா அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த ஜோக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை பரவியுள்ளது.
English abstract
perfect courtroom spelt the funny story on karnataka political factor.
Tale first revealed: Friday, Might 18, 2018, 18:26 [IST]