Motivational Tales
oi-G Uma
இயேசுநாதர்.. அன்பின் பிறப்பு.. அமைதியின் சொரூபம்.. உலகுக்கே கருணையைப் புகட்டிய கர்த்தர் இயேசு அவதரித்த நாள்தான் கிறிஸதுமஸ்.. இன்று நமக்கு எல்லாம் தேவைப்படுவது இந்த அன்புதான். இது இல்லாமல்தான், கருணை இல்லாமல்தான இன்று உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது
வெறுப்பிலும், துவேஷத்திலும் உழன்று கொண்டிருக்கும் உலகை மாற்றிப் போட அன்பு மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்க முடியும். அதைக் கையில் ஏந்தி, இயேசுநாதரின் வழி நடந்து உலகை அமைதிப்படுத்துவோம்.
அன்பு ஒன்றே அகிலத்தை ஆளும் சக்தி உடையது. எவ்வளவு வெறுப்பையும் அன்பால் வெல்ல முடியும். உன் அன்பால் எல்லா மனிதரையும் அரவணைக்க முடியும். நம் அன்பை மற்றவரோடு பரிமாறிக் கொள்ளும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனால் தான் இயேசு பிறந்த தினத்தன்று அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமாக உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருக்குப் பரிசுகள் கொடுத்து மகிழ்கிறோம்.
அன்புடையார் எல்லாம் உடையவர் ஆவார் அன்பில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப மற்றவரிடம் அன்பு காட்டும் போது நம் மனதுக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் மகிழ்ச்சி. அன்பு இருக்கும் இடத்தில் தான் இறைவனும் இருக்கிறான். முடியாதவருக்கு செய்யும் போது அவர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைக் காணும் போது அதன் சுகமே தனி தான்.
இந்த இனிய நாளில் அனைவரிடமும் அன்பு காட்டுவோம். அன்பால் உலகை வெல்வோம். எப்பொழுதும் இன்முகத்துடனும் அன்போடு மற்றவரை உபசரியுங்கள். அன்பு இருக்குமிடத்தில் ஆண்டவன் இருப்பான். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
English abstract
christmas is being celebrated as a competition of peace.