Motivational Tales
oi-G Uma
இந்த புத்தாண்டில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் அப்படி இல்லாவிட்டால் புதிதாக அந்தப் பழக்கத்தைக் கையில் எடுப்போம்.
வாசிப்பு என்பது சுவாசிப்பது போல.. நம்மை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவும் ஒரு அருமையான வழிதான் புத்தகம் படித்தல்.
புத்தகமே நமக்குச் சிறந்த நண்பன். பல நல்ல விஷயங்களை நமக்குப் புத்தகங்கள் கற்றுக் கொடுக்கின்றன. பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி ஓய்வு நேரங்களில் தெனாலிராமன் கதைகள் முல்லா கதைகள் ஈசாப் கதைகள் போன்றவற்றைப் படிக்கலாம். ஜெயகாந்தன் சுஜாதா போன்றோரின் நாவல்களைப் படிக்கலாம். எப்போதும் வேலை வேலை என்று ஓடாமல் சிறிது நேரம் புத்தகங்களை வாசிக்கலாமே.
இன்று பலரது வீட்டில் நாளிதழ்களை வாங்குகின்றனர் ஆனால் அதை படிப்பதில்லை. முடிந்தவரை தினமும் பதினைந்து நிமிடங்களாவது புத்தகம் படியுங்கள். புத்தகங்கள் உங்கள் அறிவை மேம்படுத்தும். உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். இன்று என்ன தான் எல்லாம் இணைய வழியாகப் படிக்க முடிந்தாலும் புத்தக வாசனையை நுகர்ந்து அதை அனுபவித்த தலைமுறை நாம் தான். நம் பிள்ளைகளுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதில் இருந்தே ஏற்படுத்த வேண்டும்.
பொறுப்பேற்றதில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கும் வானதி.. வாஞ்சையுடன் வரவேற்கும் பாஜக மகளிரணியினர்..!
தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் புதினங்கள் நாவல்கள் காவியங்கள் சிறுகதைகள் குறுங்கதைகள் இப்படி எண்ணற்ற வகைப் புத்தகங்கள் உள்ளது. பலதுறைச் சார்ந்த புத்தகங்களும் இருக்கிறது. புத்தகங்கள் நமக்குக் கற்றுக் கொடுப்பவை ஏராளம். புத்தகம் வாசிக்கும் மனிதன் முழுமனிதனாகிறான். தோல்வியிலே துவண்டு கிடந்த ஒருவன் தன்னம்பிக்கை கதையைப் படித்து தன் முழு முயற்சியால் ஒரு நிறுவனத்திற்கே முதலாளியாகி விட்டான். புத்தகங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும்.
புத்தகங்களை வாசிப்பதன் மூலம் வீட்டு விஷயம் முதல் உலக நடப்பு வரை அறிந்துக் கொள்ளலாம். புத்தகங்கள் நம் வாழ்வை செம்மையாக்குகின்றன. எனவே இந்த புத்தாண்டில் இருந்து தினமும் புத்தகம் படித்துப் புத்துணர்ச்சியோடு இருங்க.
English abstract
New yr resolutions are there at all times each time we entered into new yr. Here’s every other one answer.
Tale first revealed: Monday, December 21, 2020, 12:45 [IST]