Motivational Tales
oi-G Uma
24 மணி நேரமும் வேலை பார்த்து உழைத்துக் களைத்துப் போகும் பிறவியா நீங்கள்.. அதிலிருந்து கொஞ்சம் வெளியே வாங்க.. அவ்வப்போது உங்களது ஹாபியை கையில் எடுங்க.. அதற்கும் ஒரு நேரம் கொடுங்க.. உங்களுக்கு நீங்களே புதிதாக தோன்றுவீர்கள்.
இந்த வருடமாவது உங்களது பொழுதுபோக்குப் பழக்கத்தை நீங்கள் கையில் எடுத்து உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள். எப்பவும் வேலை வேலை என்று ஓடி கொண்டிருந்தால் வாழ்க்கை போரடித்து விடும். மனசை ரிலாக்சாக வைத்துக் கொள்ள பொழுதுபோக்குப் பழக்கம் தேவை.
பாட்டுப் பாடலாம் நடனம் ஆடலாம் இசை கேட்கலாம் ஓவியம் வரையலாம் கதை எழுதலாம் ஜோக் கேட்கலாம் இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கும். எப்பவும் போனும் கணினியோடு இல்லாமல் உங்கள் ஹாபி என்னன்னு யோசிங்க. உங்களுக்குப் பிடித்த சினிமா பாருங்க பிடித்த காமெடி பாருங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் பத்து நிமிடமாவது உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.
எம்ஜிஆர் பாட்டை விடுங்க.. கமலுக்கு எந்தப் பாட்டு பொருத்தமா இருக்கும்?
உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். மனஅழுத்தம் கோபம் போன்றவை குறைந்து நம் உடலை காக்க உங்கள் ஹாபியைக் கையில் எடுங்க. விளையாடுங்கள் மனம் விட்டுப் பேசுங்கள் பாடல் கேளுங்கள் கோலம் போடுங்கள் கார்ட்டூன் வரைங்க இப்படி எவ்வளவோ செய்யலாம். நம்மளை நாம மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாமல் வேறு யாரால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் புது வருடத்தில் உங்கள் பொழுதுபோக்குப் பழக்கத்தைச் செய்து மனசை எப்பவும் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள். ஹாபியைக் கையில் எடுங்க ஹாப்பியா இருங்க.
English abstract
New 12 months resolutions are there at all times on every occasion we entered into new 12 months. Here’s any other one answer.
Tale first revealed: Friday, December 18, 2020, 15:39 [IST]