Motivational Tales
oi-G Uma
நிறையப் பேருக்கு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை. அது பெண்கள் வேலை என்று ஒதுங்குவது வழக்கம்.
இந்த வருஷமாவது நமது வீட்டையும், நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவைத்துக் கொள்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே.
இந்த வருடத்தில் எத்தனையோ தீர்மானங்களை எடுப்பீர்கள். அதில் ஒன்றாக, இந்த வருடம் நான் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வேன் என்று தீர்மானம் போட்டு அதை நடைமுறைப்படுத்தவும் முயற்சிக்கலாம்.
சுத்தம் அவசியம்
சுத்தம் சோறு போடும் என்பார்கள். இன்று உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையும் வீட்டையும் தூய்மைப்படுத்தினால் தான் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். வீட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள்.
தமிழர்களின் அறிவியல்
அப்படி இல்லையென்றால் செவ்வாய் வெள்ளிக்கிழமையாவது வீட்டைத் துடைக்க வேண்டும். தமிழர்களின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் இருக்கிறது.அதிகாலை எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு வாசலை அலங்கரிப்பர். இன்றும் கிராமங்களில் அந்த பழக்கம் இருக்கிறது. சாணம் தெளிப்பதால் நோய்க்கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
வாசலில் விளக்கேற்று
மார்கழி மாதத்தில் வாசலில் விளக்கேற்றி வைப்பர். பனிக்காலம் என்பதால் இருட்டாக இருக்கும். அப்போது சங்கீத வித்வான்கள் திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடிக் கொண்டே பெருமாள் கோவிலுக்குச் செல்வர். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக விளக்கேற்ற வேண்டும் என்ற பெரியவர்கள் கூறுகின்றனர்.
துணிகளை அடுக்கி வையுங்கள்
மாதம் ஒரு முறை உங்கள் துணிகளை அழகாக அடுக்கி வைப்பது நலம். வீட்டில் ஒட்டடை இருந்தால் உடனுக்குடன் அதை அகற்றி விடுங்கள். புத்தகங்களை அடுக்கி வைத்து பாத்திரங்களை வகை வகையாய் பிரித்து வைங்க. மிக்சி கிரைண்டர் போன்ற மின்சாதனங்களை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டைப் பெண்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை ஆண்களும் சுத்தம் செய்யலாம்.
ஜன்னல் சுத்தம் அவசியம்
வீட்டின் ஜன்னல் கதவுகளைத் துடைத்து குளியலறை கழிவறை போன்றவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஒருவர் மட்டும் சுத்தம் செய்தால் போதாது. அனைவரும் ஒற்றுமையாக வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் வாசலில் காலணிகளை அதன் அலமாரியில் வைக்கச் சொல்லுங்கள்.
குப்பைகள் சேரக் கூடாது
அது போல குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது மற்றும் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் மீண்டும் வைப்பது போன்ற பழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள். சுத்தம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான் சுத்தம் என்பதை மறந்தால் நாளும் குப்பைமேடு தான். நம் வீட்டை நாம் தானே தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டில் உறுதி
இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்போம் என்று உறுதிமொழி ஏற்போம். சொல்லால் மட்டும் அல்லாது செயலிலும் காட்டி மகிழ்ச்சியாக இருப்போம். வீட்டை சுத்தப்படுத்துங்கள் சுகாதாரம் பேணுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
English abstract
New yr resolutions are there at all times each time we entered into new yr. This is every other one solution.
Tale first printed: Wednesday, December 16, 2020, 11:39 [IST]