Motivational Tales
oi-G Uma
புத்தாண்டு தீர்மானத்தின் அடுத்த தீர்மானமாக இதைப் பார்க்கலாம். வாரம் ஒரு புதுச் சமையலை கற்றுக் கொள்ளலாம்.
சாப்பிடுவது ஒரு சுகம் என்றால் சமையல் செய்வது இன்னொரு சுகம். அந்த சுகத்தை அனுபவித்து ரசித்து செய்பவர்கள் சிலர்தான்.
பலருக்கு சமையல் என்றாலே கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த வருடம் அதிலிருந்து மாறி சமையல் கற்றுக் கொள்ளமுயலலாம்.
தனம் 2 மாசம் முழுகாம இருக்காம்.. பாண்டின் ஸ்டோர்ஸ் குடும்பம் ஹேப்பி!
பிடிக்காதவர் உண்டா
சமையலைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்போதெல்லாம் ஆண்களும் கூட அதிகமாக சமையல் கற்றுக் கொண்டு கலக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வருடத்தில் நாம் புதிதாக சமையல் கற்றுக் கொண்டு வாரம் ஒரு புதுச் சமையல் மூலமாக குடும்பத்தினரை மகிழ வைக்கலாம்.
சமைத்துப் போடுங்கள்
சமையல் தெரியாதவர்கள் என்றால் சமையலையும் கூடவே கற்றுக் கொண்டு இந்த வருடம் அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மணக்க மணக்க சமைத்துப் போடுங்கள். அதை சாப்பிட்டு முடித்து அந்த ருசியை சிலாகித்துச் சொல்லும்போது மனசுக்கு கிடைக்கும் சுகமே தனிதான்.
வித்தியாசமா சமைங்க
எப்பவும் வீட்டில் இட்லி தோசை உப்புமா என்று புலம்புபவரா நீங்கள். அதே இட்லியை கலர் கலராக செய்து அசத்தலாம். தக்காளி தோசை நீர் தோசை சுரைக்காய் தோசை பட்டாணி தோசை பன்னீர் தோசை இப்படி விதவிதமாக செய்து சாப்பிடலாமே.
நிமிடத்தில் சமையல்
இரண்டு நிமிடத்தில் காலை உணவு செய்து முடிக்கலாம் அதே சமயத்தில் சுவையாகவும் தான். கேழ்வரகு கஞ்சி களி சிறுதானியங்கள் வைத்து தோசை உப்புமா போன்ற உணவுகளை உங்கள் பிள்ளைகளுக்குச் செய்துக் கொடுத்தால் நேரமும் மிச்சமாவதோடு சத்தான உணவும் கொடுத்த மகிழ்ச்சியும் இருக்கும்.
தவிர்க்காதீங்க
இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெரும்பாலும் வேலை காரணமாக காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். அவ்வாறு செய்யாமல் பழங்கள் டிரை ப்ரூட்ஸ் அல்லது கஞ்சி போன்றவை எடுத்துக் கொள்ளலாம். விதவிதமாகச் சாப்பிட வேண்டுமென்றால் ஓட்டலுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே நாம் எப்பொழுதும் செய்யும் உணவைக் கொஞ்சம் வித்தியாசப்படுத்தினாலே போதும்.
அன்பும் ருசியும்
சமையல் செய்வது என்பது வேலை அல்ல. மனதார நமக்கும் நம் குடும்பத்திற்காகவும் செய்வது. அந்த உணவின் ருசியில் அன்பு கலந்திருக்கும். குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக அதுவும் சத்தாக சுவையாக செய்யலாம். நம்முடைய ஆரோக்கியமும் நம் குடும்பத்தின் ஆரோக்கியமும் நாம் சமைக்கும் உணவில் தானே உள்ளது. வாரம் ஒரு புது சமையலைச் செஞ்சு அசத்துங்க இந்த புத்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகட்டும்.
English abstract
New yr resolutions are there at all times each time we entered into new yr. Here’s any other one answer.
Tale first revealed: Monday, December 14, 2020, 17:25 [IST]