சென்னை: தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கலாம் என கடைக்கு போனால், ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலையாக உள்ளது. பொருட்களின் விலைதான் உயருகிறதே தவிர சம்பளம் உயர்ந்தபாடில்லை மக்களுக்கு. போன வருடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய சட்டை இப்போது இருநூறு ரூபாய். கேட்டால் கொரோனாவைக் காரணமாகச் சொல்வார்கள். சரி, அவ்வளவு விலை கொடுத்து வாங்குகிற உடையாவது நன்றாக இருக்கிறதா