இந்த சிறப்புத் திரையிடல் தொடர்பாக கபில்தேவ் அளித்த சுவாரஸ்ய பேட்டியில், ஆம் அன்றைய இரவு வெறும் வயிற்றுடன் டின்னர் சாப்பிடாமல்தான் உறங்க நேரிட்டது. அன்று இரவு விருந்து முடிந்த பின் கையில் கொடுக்கப்பட்ட பில் பயங்கரம் என்று நகைச்சுவையாக கூறினார் கபில்தேவ். மேலும் உலகக்கோப்பையை வென்றது இன்னும் கூட புதிர்தான் என்றார்.
இரவு முழுதும் வீரர்கள் அனைவரும் பார்ட்டிதான், கொண்டாட்டம்தான், எல்லாம் முடிந்து சாப்பிடலாம் என்று போனால் எல்லா உணவகங்களும் முடிந்து விட்டது. இதனால் வீரர்களுக்கு வேறு வழியில்லை வெறும் வயிறுடன் தான் சென்று படுத்தோம். ஆனால் யாரும் உணவைப்பற்றி கவலைப்படவில்லை, உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியே வயிற்றை நிரப்பி விட்டது.
நாட்டுக்காக வரலாறு படைத்ததே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்றார் கபில்தேவ். 83 திரைப்படத்தில் கபில் தேவ் ரோலில் நடித்த ரன்வீர் சிங்குக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது, குறிப்பாக கபில்தேவின் பவுலிங் ஆக்ஷனை திருப்பி செய்வது சாதாரண விஷயமல்ல, சச்சின் டெண்டுல்கர் முதற்கொண்டு அனைவரும் அதை எப்படிச் செய்யப்போகிறாய் என்று ரன்வீர் சிங்கிடம் கேட்டனர்.
ஆனால் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி கோச் எடுத்துக் கொண்டதோ இல்லையோ, இந்த கபில் ரோலை செய்ய ரன்வீர் சிங் கோச்சிங் எடுத்துக் கொண்டார்.இன்று இந்தியா முழுதும் 83 திரைப்படம் வெளியாகிறது.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.