Motivational Tales
oi-G Uma
சென்னை: சிலருக்கு இலக்குகளை நிர்ணயிப்பதில் குழப்பம் வரும். பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயித்து விட்டு, அது நிறைவேறாமல் போகும்போது அய்யயோ தோத்துப் போயிட்டோமே என்று புலம்புவார்கள். அது தவறு.. இலக்குகளை எளிமையாக நிர்ணயிங்கள். வெற்றியும் சுலபமாகும்.. நினைத்ததும் நடக்கும்.
இலக்குகள் தான் வாழ்வை சுவாரஸ்யமாக்கும். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய முடியவில்லை என்று கவலைப்படாமல் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சின்ன சின்ன இலக்குகளின் மூலம் பெரிய இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்.
சின்ன சின்ன இலக்குகளில் வெற்றி கிட்டும் போது அதைக் கொண்டாடுங்கள். அதுவே உங்களின் லட்சியத்தை அடைய ஊக்குவிக்கும். பெரிய இலக்குகளை நிர்ணயித்து என்னால் அதை அடைய முடியவில்லையே என்று புலம்பாமல் சின்ன சின்ன இலக்குகளால் பெரிய இலக்கை அடையும் வழியை யோசியுங்கள்.
வாழும் காலம் குறைவு.. வாழ நினைத்தால் வாழலாம்!
தோல்வியைக் கண்டு துவளாமல் எத்தனை முறை தோற்றாலும் நான் மீண்டு வருவேன் என்ற தன்னம்பிக்கையோடு போராடுங்கள். அந்த விடா முயற்சிதான் நமது விஸ்வரூப வெற்றிகளுக்கு எப்போதுமே மூல காரணமாகவும், மூல பலமாகவும் அமையும்.
நான் இந்நாட்டின் முதலமைச்சராவேன் என்று பெரிய இலக்கை நிர்ணயிக்காமல் என் சொந்த தொகுதியில் எம்.எல். ஏ வாக இருப்பேன் என சிறிய இலக்கை வைத்துக் கொண்டு அதில் வெற்றிப் பெற்று மகிழுங்கள். பெரியளவில் லட்சியம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை சிறிய அளவில் இருந்தாலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். இலக்குகளை ஈசியாக்குங்க. ஈசியா வெற்றிப் பெறுங்கள்.
English abstract
Intention your goals neatly and win the whole thing comfortably.