All just right issues come to an finish and lately as I bid adieu to the sport that has given me the entirety in lifestyles, I wish to thank everybody who made this 23-year-long adventure gorgeous and remarkable.
My heartfelt thanks 🙏 Thankful .https://t.co/iD6WHU46MU
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
41 வயதாகும் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஹர்பஜன் தன் ஐபிஎல் தொடர் வாழ்க்கையின் இறுதிப் பகுதிகளிலேயே மெண்ட்டாராக பணியாற்றத் தொடங்கி விட்டார். வருண் சக்ரவர்த்தியை ஒரு அற்புதமான ஸ்பின்னராக்கியடில் ஹர்பஜனின் பங்கு அபரிமிதமானது.
13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சராசரி 26, ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்து வீச்சு.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச டி20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் மொத்த கிரிக்கெட் வாழ்வில் கைப்பற்றியுள்ளார்.
1998ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் கிரிக்கெட்டைத் தொடங்கிய ஹர்பஜன் சிங், கடைசி டெஸ்ட் போட்டியை 2015-ல் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆடினார். 1998ம் ஆண்டு ஏப்ரலில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹர்பஜன் 2015-ல் தென் ஆப்பிரிக்காவுடன் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடினார்.
Also read: தென் ஆப்பிரிக்காவிலும் இது நடக்கும் – முன்னாள் வீரர் பிரவீண் ஆம்ரே எச்சரிக்கை
கடைசியாக 2016-ல் யுஏஇக்கு எதிராக டாக்காவில் டி20 சர்வதேச போட்டியில் ஆடினார் ஹர்பஜன் சிங். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆர்சிபி அணியுடன் சென்னையில் ஏப்ரல் 2021-ல் ஆடினார் ஹர்பஜன் சிங். அணிக்கான வீரர், மிகவும் ஜோவியல் டைப், மிமிக்ரியில் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.