Motivational Tales
oi-G Uma
மழை கேளுங்கள்.. மழையின் சத்தம் அதன் வெளிப் பூச்சுதான்.. அதன் ஆன்மாவை என்றாவது நுகர்ந்துள்ளீர்களா.. அதைக் கேட்டுப் பாருங்கள்.. நுகர்ந்து பாருங்கள்.. உணர்ந்து பாருங்கள்.. புரிந்து பாருங்கள்.. மழையை விட மிகப் பெரிய காதலி உங்களுக்கு கிடைக்க மாட்டாள்.. அவனை விட சிறந்த காதலன் உங்களுக்கு கிடைக்க மாட்டான்
உங்களை எல்லா வகையிலும் குளிர்விக்கக் கூடிய ஜீவன் உலகத்தில் எது தெரியுமா.. மழை மட்டுமே.. மழையைப் போல ஒரு உயிரை எங்குமே நீங்க பார்க்க முடியாது.. மழைக்கு உயிருண்டா என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்.. பயிருக்கும் பச்சைக்கும் உயிர் தரும் மழைக்கு உயிர் இல்லாமல் வேறு எதற்கு உயிர்ப்பு இருக்க முடியும்.. அந்த உயிர்ப்பு இல்லாவிட்டால் நமக்கும் கூட உயிர் இல்லாமல் போய் விடுமே..
மழை தான் நமக்கு உயிர் நீர். ஒவ்வொரு துளி மழையும் மிகவும் முக்கியம். மழைத்துளி நம்மீது படும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. மழையில் கப்பல் விடுவது ஜன்னலோரம் நின்று மழைத்துளியில் சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடுவர். மழையில் விளையாடுவதோடு நின்று விடாமல் மழை நீரை சேமித்து வையுங்கள்.
மழைநீரை சேமியுங்கள் அதுவே நாம் நம் எதிர்காலச் சந்ததிக்குச் சேர்த்து வைக்கும் பெரும் சொத்தாகும். மழையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடுங்கள். மழையில் சூடாக ஒரு கப் தேநீர் அதுவும் மனதுக்குப் பிடித்தவரோடு சேர்ந்து குடிக்கும் போது அதில் கிடைக்கும் பாருங்க ஓர் ஆனந்தம் அதை விவரிக்க வார்த்தைகளே இல்லைங்க.
மழையால் விவசாயம் பெருகும். விவசாயம் பெருக நாட்டின் வளமும் உயரும். மழையே நீ வருக மக்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தருக.
மழையை வா என்று வரவேற்கத் தயாராகுங்கள்.
உணர்ந்து பாருங்கள் மழையை.. ஒரு நாளாவது.. ஒரு துளியாவது..!
English abstract
Every time you face a rain simply really feel it and its soul.