முதலில் களமிறங்கிய சௌராஷ்டிரா அணியில் ஓபனர் விஷ்வராஜ் ஜடேஜா 74 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்து, ஒன் டவுன் வீரர் ஷெல்டோன் ஜாக்சன் 125 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 134 ரன்கள் எடுத்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். தொடர்ந்து பெராக் மன்கட் 37 (32), அப்ரித் வஷவடா 57 (40) போன்றவர்களும் அதிரடி காட்டியதால், சௌராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 310/8 ரன்கள் குவித்து அசத்தியது. விஜய் சங்கர் 4/72, சிலம்பரசன் 3/54 ஆகியோர் அதிக விக்கெட்களை கைப்பற்றினர்.
‘இங்கிலாந்து அணி’…ஜோ ரூட், ஆண்டர்சன் இடையே மோதல்: மாறி மாறி புகார் கூறியதால் திடீர் பரபரப்பு!
தமிழ்நாடு இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன், ஒன் டவுன் வீரர் விஜய் சங்கர் ஆகியோர் அடுத்தடுத்து சேத்தன் சகார்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓபனர் பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய சகோதரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் மழை பொழியத் துவங்கினர்.
இந்நிலையில் அபரஜித் 122 (124), இந்திரஜித் 50 (58) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 31 (26), வாஷிங்டன் சுந்தர் 70 (61) போன்றவர்கள் சிறப்பாக விளையாடியதால், தமிழ்நாடு அணி வெற்றிக்கு அருகில் முன்னேறி வந்தது. இந்நிலையில் இவர்களும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் ஷாருக்கானும் 17 (11) ரன்கள் அடித்து நடையைக் கட்டி ஷாக் கொடுத்தார்.
Breaking: ஓய்வை அறிவித்தார் ‘இந்திய வீரர்’: பயிற்சியாளராக மாற திட்டம்?
கடைசி ஓவர்:
இறுதியில் பௌலர்கள் சாய் கிஷோர், ரகுபதி சிலம்பரசன் ஆகியோர் களத்தில் இருந்தார்கள். 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இவரும் சிங்கில்களை எடுத்ததால், 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அடுத்த பந்தில் சிங்கில் சென்ற நிலையில், தொடர்ந்து ஒய்ட் சென்றது. இறுதியில் கடைசி பந்தில் சாய் கிஷோர் பவுண்டரி அடித்ததால், தமிழ்நாடு அணி கடைசி பந்தில் 314/8 ரன்கள் சேர்த்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சர்விஸ் அணி (204/10), இமாச்சல பிரதேச அணி (281/6) மோதிய நிலையில், இமாச்சல பிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டி வரும் ஞாயிறு (டிசம்பர் 26) அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.