கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற சமந்தாவின் ஐட்டம் பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் அவரது நடனக்குழுவில் இருந்து பெண் ஒருவரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த கணேஷ் ஆச்சார்யா தன் மீது உள்ள அனைத்து குற்றங்களையும் மறுத்துள்ளதாகவும், தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.