kamal300322 2 0a1

kamal300322 1அஜித் நடித்த ’வலிமை’ மற்றும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கமல்ஹாசனின் அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

udhay300322 1

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், காயத்ரி ஷங்கர், மைனா நந்தினி, அந்தோனி வர்கீஸ் உள்பட பலர் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.