நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் ரிலீசானது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செல்பி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரிலீஸ் செய்வதால் மிகப்பெரிய அளவில் புரமோசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’ஐங்கரன்’. இந்த படம் ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 28ம் தேதி ’ஐங்கரன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி ‘செல்பி’ மற்றும் ஏப்ரல் 28ஆம் தேதி ‘ஐங்கரன்’ என ஒரே மாதத்தில் ஜிவி பிரகாஷின் இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகவுள்ளன.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகிய ‘ஐங்கரன்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் மற்றும் காளி வெங்கட் ,ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
GV.Prakash in #Ayngaran from April twenty eighth in theatres pic.twitter.com/npOk7UdDSw
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 29, 2022