வலிமை படத்தில் அஜித், ஹூமா குரேஷி இடையே காதல் இல்லை மாறாக நட்பு மட்டுமே என ஹெச். வினோத் தெரிவித்துள்ளார்.

வலிமை

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வலிமை. தமிழில் வலிமை என்று ஒரு படம் உருவாகியிருப்பது உலக சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும். சரி, விஷயத்திற்கு வருவோம். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி யாரும் கிடையாதாம்.

ஹூமா குரேஷி

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி வலிமை படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கிறார். ஒரு வேளை வேலை பார்க்கும் இடத்தில் அஜித்துக்கும், ஹூமாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அஜித்துக்கு ஜோடி யாரும் இல்லை. ஹூமா வெறும் தோழி மட்டுமே என்று ஹெச். வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விபத்து

வலிமையில் 3 பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு காட்சியை படமாக்கியபோது அஜித் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார். தனக்கு காயம் ஏற்பட்டதை கூட பெரிதுபடுத்தாமல் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள பைக் சேதமடைந்தது பற்றி தான் பதறினாராம். பின்னர் மறுநாளே தன் சொந்த செலவில் புது பைக் வாங்கி வந்தாராம். படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அஜித் இப்படி செய்திருக்கிறார்.

தல திருந்தாது

ஹைதராபாத்தில் நடந்த பைக் ஸ்டண்ட் காட்சி ஷூட்டிங்கில் தான் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. தான் படுகாயம் அடைந்த போதிலும் அதை பொருட்படுத்தாது படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறார். பைக் ஸ்டண்ட் காட்சி இருக்கிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்ததுமே விபத்தை நினைத்து தான் ரசிகர்கள் பயந்தனர். எத்தனை முறை விபத்து ஏற்பட்டாலும் இந்த தல திருந்தாது. ரிஸ்க் எடுத்துக் கொண்டே தான் இருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.