ஹைலைட்ஸ்:

  • வேற மாறி பாடலை வேற லெவலில் கொண்டாடும் தல ரசிகர்கள்
  • யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டு

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் வரும் வேற மாறி பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார்.
வீடியோவில் அஜித்தை பெப்பர் லுக்கில் ஃபிட்டாக இருப்பதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. தலயை இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

வேற மாறி பாடலை எழுதியதற்காக விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் வினோத்தை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ஒரு பாடலே வேற மாறி இருக்கிறது என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். நாங்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்தது வீண் போகாது என்பது மட்டும் புரிகிறது என்கிறார்கள் தல ரசிகர்கள்.

நேற்று இரவில் இருந்து வேறி மாறி பாடலை ரிப்பீட் மோடில் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா சிறப்பான சம்பவம் செய்துவிட்டதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிமை படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சியை மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்க காத்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படக்குழுவால் உடனே வெளிநாட்டிற்கு கிளம்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு பிடித்த மனிதர், நடிகர் விஜய் சேதுபதி: தனுஷ் ஹீரோயின்