நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த கீர்த்தி ஆசாத், “கோலி ஒருநாள் அணி கேப்டன்சி முடிவை அணித்தேர்வுக்குழுதான் எடுக்க வேண்டுமெனில் அவர்கள் கங்குலியிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். பொதுவாக என்ன நடைமுறை எனில், நானும் தேர்வுக்குழுவில் இருந்திருக்கிறேன், அணியைத் தேர்வு செய்த பிறகு வாரியத் தலைவரிடம் அது பற்றி விளக்கம் அளிப்போம்.
அவர் பார்த்து ஓகே சொல்லி ,கையெழுத்திட்ட பிறகுதான் வெளி உலகுக்கு அறிவிக்கப்படும். இதுதான் வழக்கம். எனவே கேட்பனை மாற்றுகிறோம் என்றால் வாரியத்தலைவருக்கு எழுதி ஒப்புதல் பெற வேண்டும். விராட் கோலி இதனால் ஏமாற்றமடையவில்லை, ஆனால் தனக்கு தெரிவிக்கப்பட்ட விதத்தில் அவர் காயமடைந்திருக்கலாம்.
கங்குலியிடம் போன பிறகு அவர் அதிகாரபூர்வமாக இல்லாமல் கூட அவரிடம் பேசியிருக்கலாம். அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் பெரிய ஆட்கள்தான். ஆனால் இவர்கள் ஆடிய மொத்த மேட்ச்களை கணக்கெடுத்தால் விராட் கோலி ஆடியதில் பாதி தேறுமா என்பதே கடினம்” என்றார் கீர்த்தி ஆசாத்.
கங்குலி கூட இது குறித்து மீடியாக்கள் கேட்ட போது இதை பிசிசிஐ-யிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார், உண்மையில் என்னதான் நடந்தது, பிசிசிஐக்கு கொஞ்சம் வெளிப்படைத்தன்மை தேவை என்று பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் தோற்றதையடுத்து முகமது ஷமியை கன்னாபின்னாவென்று ட்ரால் செய்ததை எதிர்த்து விராட் கோலி கடும் விமர்சனங்களை முன் வைத்தது கூட கோலியை தூக்கியதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் வேறு பார்வைகளை முன் வைக்கின்றன. கங்குலி இது குறித்து உண்மையைக் கூறினாலே தவிர உண்மையான காரணம் புதைக்கப்படும் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.