1648840388 pic

ஐபிஎல் 15ஆவது சீசனின் 8ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.பஞ்சாப் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன் மட்டும் எடுத்து உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். இதனைத் தொடர்ந்து தவன், பனுகா ராஜபக்ஷா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அப்போது ஷிவம் மாவி வீசிய 4ஆவது ஓவரில் ராஜபக்ஷா ஒரு பவுண்டரி, ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதனால், ஸ்கோர் 200+ ரன்களை தாண்டும் எனக் கணிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய அடுத்த பந்தில் ராஜபக்ஷா 31 (9) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து இவர் கூட சிறப்பாக செயல்படவில்லை. லிவிங்ஸ்டன் (19), ராஜ் பவார (11), ஷாருக்கான் 0 (5), ஹர்பம்பிரித் ப்ரார் (14) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். அடுத்து டெய்ல் என்டர்ஸும் பெரிதாக சோபிக்கவில்லை.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 110 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 4/23 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

கொல்கத்தா இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய கல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 3 (7) பெரிய ஸ்கோர் அடிக்காமல், ஓடியின் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அஜிங்கிய ரஹானே 12 (11) ரபாடா பந்துவீச்சில் நடையைக் கட்டினார். இந்நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் 26 (15), நிதிஷ் ராணா 0 (2) இருவரும் ராகுல் சஹார் வீசிய 7ஆவது ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆனதால், போட்டி பஞ்சாப் அணி பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

இந்நிலையில் சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தார்கள். அப்போது ஹர்பிரித் ப்ரார் வீசிய 10ஆவது ஓவரில் ரஸல் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓடியன் ஸ்மித் வீசிய 12ஆவது ஓவரில் ரஸல் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி மொத்தம் 30 ரன்களை சேர்த்து, பிமரிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் வெற்றிவாய்ப்பு எளிதாக மாறியது.

அடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சிலும் ரஸல் 14 ரன்களை சேர்த்தார். இதனால், கொல்பத்தா அணி 14.5ஆவது ஓவரிலேயே 141/4 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றபெற்றது. ரஸல் 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்களை குவித்து அசத்தினார்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.