இவர் 2018ஆம் ஆண்டில், 21 வயதாக இருக்கும்போதுதான் பிஎஸ்எல் தொடரில் காலந்தர்ஸ் அணிக்கு அறிமுகமானார். இதுவரை 37 போட்டிகளில் 7.65 எகனாமியுடன் 50 விக்கெட்களை வீழ்த்தி, இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சிறப்பாக பந்துவீசி வந்ததால், கடந்த வருடம் காலந்தர்ஸ் அணிக்கு துணைக் கேப்டனாகவும் இருந்தார். இந்நிலையில், சோஹைல் அக்தரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, அப்ரீதிக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
IND vs SA: ‘புயல்வேக புலி’ நோர்க்கியா விலகல்…இவருக்கான மாற்று வீரர் ‘இன்னும் பயங்கரமானவராம்’!
அப்ரீதி பேட்டி:
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷாஹீன் அப்ரீதியிடன், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதுகுறித்து பேசிய அப்ரீதி, “முகமது ரிஸ்வானின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பலமுறை உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். சிறந்த கேப்டன்களில் அவர்தான் முதன்மையானவர். அடுத்துதான் பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாம்” என அதிரடியாக பேசினார்.
மேலும் பேசிய அவர், “எனக்குப் பிடித்த, விருப்பமான பேட்ஸ்மேன் என்றால் அது பாபர் அசாம்தான். பேட்ஸ்மேனாக, கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் அணி தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது” என்றார்.
இந்நிலையில், பெஸ்ட் கேப்டன் பட்டியலில் பாபர் அசாமுக்கு இரண்டாவது இடம்தான் என அப்ரீதி கூறியதற்குப் பின்னால், ஏதோ அதிருப்தி இருப்பதுபோல் தெரிகிறது எனவும், பெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்தும் அந்நாட்டு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.