ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ படத்தின் நாயகியான திவ்யபாரதி அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். தினந்தோறும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது .
இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள திவ்யபாரதி அங்கிருந்து பிகினி புகைப்படங்கள் உள்பட பல்வேறு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் .
இந்த நிலையில் விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் செம ஆட்டம் போட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
ஒரே ஒரு வெற்றிப் படத்தின் மூலம் பிரபலமாகி விட்ட திவ்யபாரதி, தற்போது சமூக வலைதளத்திலும் வேற லெவலில் பிரபலமாகி வருவதால் அவருக்கு திரைப்படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.