தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி சன் டிவியில் விஜய் உள்பட படக்குழுவினர் அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளதால் இந்த பேட்டியை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் .
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர் நெல்சன் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளின் இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் நெல்சன் என்பதும் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ படத்தின் ரிலீஸின் போது அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமெடியாக இருந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நெல்சன் என்ற தகவல் வெளிவந்ததை அடுத்தது இந்த நிகழ்ச்சியும் கலகலப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Everybody’s excited for the #BeastTrailer ????
Naanga able! Neenga able ah?#BeastTrailerFromTomorrow@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv @iYogiBabu #BeastModeON #Beast pic.twitter.com/qrmLyvEXds— Solar Footage (@sunpictures) April 1, 2022
The much-awaited #BeastTrailer is liberating on April second @ 6 PM
Namma aattam inimey vera maari irukum ??@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L— Solar Footage (@sunpictures) March 30, 2022