சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி அன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல தயாராகி வருகின்றனர் படக்குழுவினர்.

அடடே..! நம்ம பிரபுவா இது: இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
இந்த நிலையில் வரும் தீபாவளியன்று ‘பீஸ்ட்’ படத்தின் பாட்டு சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டதாகவும் விஜய்யின் அறிமுக பாடலை தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளியன்று வெளியாகும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் சிங்கிளும் தீபாவளி தினத்தில் ரீலிசாக உளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அனேகமாக இந்த தீபாவளி ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட மூன்று தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.