ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் 5 ஒளிபரப்பு நேரத்தால் எரிச்சலில் பார்வையாளர்கள்
  • கமலிடம் புகார் தெரிவிக்கும் பிக் பாஸ் 5 பார்வையாளர்கள்

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த சீசனில் யாரை வைத்து காதல் டிராக்கை ஓட்டப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 10 மணிக்கு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாங்கள் எப்பொழுது தூங்குவது. மறுநாள் வேலை வெட்டிக்கு போக வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நேரத்தை மாற்றுமாறு பலரும் கமல் ஹாசனிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு சிலரோ, கமலிடம் சொல்லி என்ன புண்ணியம். அவரே சம்பளத்திற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரால் எப்படி ஒளிபரப்பு நேரத்தை மாற்ற முடியும். கமலிடம் புகார் தெரிவிப்பது வேஸ்ட் என்கிறார்கள்.

நேரம் மட்டும் அல்ல நிகழ்ச்சியை துவங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்களை அழ வைத்து டாஸ்க் கொடுத்திருப்பதும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஆரம்பே அழுகாச்சியா, வெளங்கிடும் என்கிறார்கள்.

எவ்ளோ மானங்கெட்டு திரிய வேண்டியிருக்கு: பிக் பாஸ் போட்டியாளரை பங்கம் செய்த நெட்டிசன்ஸ்இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமல் ஹாசனையும் விளாசிய அபிஷேக் ராஜாவின் வீடியோ வைரலாகிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசிவிட்டு அந்த வீட்டிலேயே தங்கியிருக்கிறாரே அபிஷேக் என்று சமூக வலைதளங்களில் அவரை கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள்.

மும்பை விமான நிலையத்தில் தலைவி பட நாயகி!