ஹைலைட்ஸ்:

  • விஜய் சேதுபதியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
  • பிக் பாஸ் வீட்டிற்கு வருவாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று துவங்கியது. இம்முறை புதுமுகங்கள் தான் அதிகம். நேற்று இரவு ஒவ்வொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது விஜய் சேதுபதியும் வருவார் என்று எதிர்பார்த்தவர்களும் உண்டு.

அப்பாடா, வேண்டுனது வீண் போகல: மகிழ்ச்சியில் பிக் பாஸ் 5 பார்வையாளர்கள்அவர் வராததை பார்த்து அப்பாடி, விஜய் சேதுபதி வரவில்லை என்று நிம்மதி அடைந்தவர்களும் உண்டு. இருப்பினும் அவர்கள் விஜய் சேதுபதியை சும்மாவிடுவதாக இல்லை.

பிக் பாஸ் ப்ரொமோ வீடியோ வெளியாகும் போது எல்லாம் விஜய் சேதுபதியை பற்றி ஏதாவது மீம்ஸ் போடுகிறார்கள். இந்நிலையில் தான் சர்ப்ரைஸ் கன்டெஸ்டென்டா விஜய் சேதுபதி வர்றாராம், யார் சொன்னா? இன்னொரு வாட்சப்ப் குரூப் அட்மின் சொன்னாரு.. என கலாய்த்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வழக்கமாக ப்ரொமோ வீடியோ பயங்கரமாகவும், நிகழ்ச்சி சுமாராகவும் இருக்கும். ஆனால் இம்முறை ப்ரொமோ வீடியோவே கொடூர மொக்கையாக இருக்கிறதே என்கிறார்கள்.
மேலும் ப்ரியங்கா தேஷ்பாண்டே சவுண்டு விடுவது பற்றியும் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரிக்கா என்கிறார்கள் ப்ரியங்காவின் ஆதரவாளர்கள்.