தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேகா வாணி கலந்து கொள்வது குறித்து அவரின் மகள் சுப்ரிதா விளக்கம் அளித்திருக்கிறார்.

பிக் பாஸ்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் செப்டம்பர் மாதம் 5ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவது இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த பட்டியலில் நடிகை சுரேகா வாணியின் பெயரும் இருக்கிறது. இது குறித்து சுரேகாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.

சுரேகா வாணி

தான் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் அறிந்த சுரேகா வாணி சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து போஸ்ட் போட்டார். பின்பு என்ன நினைத்தாரோ அதை நீக்கிவிட்டார். இந்நிலையில் அவரின் மகள் சுப்ரிதா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, என் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை. அவருக்கு அந்த கான்செப்ட்டே பிடிக்கவில்லை என்றார்.

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 5 தெலுங்கு நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கவிருக்கிறார். போட்டியாளர்கள் அனைவரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு குவாரன்டைனில் இருக்கவிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பதால் அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

க்ரித்தி ஷெட்டி

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் பைலட் எபிசோடில் உப்பேனா சூப்பர் ஹிட் பட புகழ் க்ரித்தி ஷெட்டி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. தற்போது டோலிவுட்டின் ஹாட் டாபிக்கான அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பி எகிறிவிடும் என்று நினைக்கிறார்களாம். க்ரித்தியின் பெயரை பரிந்துரை செய்ததே நாகர்ஜுனா தானாம்.