அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று முன்தினம் ஓடிடியில் ரிலீஸான நிலையில் இந்த படம் 24 மணி நேரத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரிமிங் நிமிடங்கள் பெற்று சாதனை செய்ததாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது 48 மணி நேரத்தில் புதிய சாதனை செய்து உள்ளதாக போனிகபூர் அறிவித்துள்ளார்.
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் 200 கோடி வசூலை தாண்டி 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியான போதிலும் இன்னும் பல திரையரங்குகளில் ‘வலிமை’ திரையிடப்பட்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் ‘வலிமை’ திரைப்படம் ஓடிடி ரிலீசில் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளதாக அறிவித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியான 48 மணி நேரத்தில் 200 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் பார்க்கப்பட்டு உள்ளதாக போனிகபூர் அறிவித்துள்ளதை ஓடிடி வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
You’ll be expecting best Mass information for this blockbuster entertainer!! ??????
200 million streaming mins in 48 hours.#Valimai is now streaming on #ZEE5#AjithKumar#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@ActorKartikeya#NiravShah#ValimaiOnZEE5 #Valimai pic.twitter.com/l0gpEIzqGn— Boney Kapoor (@BoneyKapoor) March 27, 2022