இந்த இரண்டாவது போட்டி முடிந்தப் பிறகு பேசிய சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், “பனி காரணமாக எங்கள் ஸ்பின்னர்களால் பந்துவீச முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின்போது மைதானத்தில், நயாகரா நீர்வீழ்ச்சி போல பனி காணப்பட்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை பிடிப்பதே மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்தார். அதாவது டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை மறைமுகமாக கூறியிருந்தார்.
இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், பனியின் தாக்கத்தை ஒழிக்க தற்போது புது திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது, மைதானத்தில் பனியின் தாக்கத்தை பெருமளவு குறைக்க ரசாயனத்தைத் தெளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கடைசியாக சிஎஸ்கே, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முதலே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாம். இதனால்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு பனியின் தாக்கம் குறித்து சிஎஸ்கே வாய் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இனி வரும் போட்டிகளின்போதும் பனியின் தாக்கத்தை பற்றி யாரும் பேசாத அளவுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த திட்டம் இருக்கிறது. இதற்கு பலரும் வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.