ஹைலைட்ஸ்:

  • படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்த சேரனுக்கு தலையில் 8 தையல்
  • நான் நலமாக இருக்கிறேன், பயம் ஒன்றும் இல்லை- சேரன்

இயக்குநர் சேரன் தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் கால் தவறி கீழே விழுந்த சேரனுக்கு தலையில் அடிபட்டது.

இதையடுத்து அவருக்கு 8 தையல் போடப்பட்டிருக்கிறது. தனக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என்று சொல்லி தன் காட்சிகளை நடித்துக் கொடுத்து படக்குழுவினரை நெகிழ வைத்திருக்கிறார் சேரன்.

இந்நிலையில் சேரனுக்கு காயம் என்று அறிந்த ரசிகர்கள் பதறிவிட்டனர். சேரன் சாருக்கு என்னாச்சு, யாராச்சும் விபரம் சொல்லுங்களேன் என்று சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட சேரன் ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவர்க்கும்..என்றார்.

சேரனின் ட்வீட்டை பார்த்த பிறகே அவரின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சார் என தெரிவித்துள்ளனர்.

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு குறித்து சேரன் அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி கட்ட முடியலனு பால்காரர் கோர்ட்டுக்கு வராறா?: தனுஷிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட நீதிபதி