3.சிட்னி டெஸ்ட்:
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இதில், 4ஆவது நாள் ஆட்டத்தின்போது, பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த முகமது சிராஜை, சில ஆஸ்திரேலிய ரசிகர்கள், நிறவெறி சம்பந்தமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகப் புகார் எழுந்தது. இது அப்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், அந்த நபர்களுக்கு எதிராக ஆஸி கடும் நடவடிக்கை எடுத்தது.
2.மேட்ச் பிக்சிங்:
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியைச் சந்தித்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. அப்போது டாஸ் போடும் நிகழ்வு வந்தபோது கேப்டன் கோலி, முகமது நபி ஆகியோர் களத்திற்குள் வந்தனர். நபி டாஸ் ஜெயித்தப் பிறகு, கோலியிடம், ‘பீல்டிங் தேர்வுசெய்யப் போகிறேன்’ எனத் தெரிவித்துவிட்டு, பிறகு மைக்கில் அதனை அறிவித்தார்.
இதனை பாகிஸ்தான் ரசிகர்கள் பலர், மேட்ச் பிக்சிங் நடந்திருக்கிறது என கதை கட்ட ஆரம்பித்தனர். அது எப்படி எதிரணி கேப்டனிடம் கூறி, உத்தரவு வாங்கிய பிறகு நபி அறிவிக்கலாம் என கேள்விகளை எழுப்பி, இதனை ட்ரெண்ட் செய்தனர். இருப்பினும், ஐசிசி இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
1.கங்குலி vs கோலி:
ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலியை, பிசிசிஐ நீக்கிய பிறகு பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “ஒருநாள், டி20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன் இருந்தால் நன்றாக இருக்காது. இதனால்தான், ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டு, டி20 அணிக் கேப்டன் ரோஹித்திடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் வலியுறுத்தினேன். ஆனால், கோலி அதனை ஏற்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சில தினங்களில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோலி, “டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனது தனிப்பட்ட முடிவு. பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என யாரும் கூறவில்லை” என அதிரடியாக பேசினார். இந்த சர்ச்சை தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.