அமெரிக்க அணியில் ஓபனர்களாக களமிறங்கிய கேப்டன் மோனாக் படேல் 2 (2), ரியான் ஸ்காட் 8 (8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். அடுத்து மார்ஷல் 4 (11), ரித்விக் 0 (4) போன்றவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி 16/4 எனத் திணறியது. 50 ரன்களை கூட கடக்காது என்றுதான் கருதப்பட்டது.
ஆனால் அடுத்துக் களமிறங்கிய சுஷாந்த் மொதானி, கஜனந்த் சிங் இருவரும் காட்டடி அடிக்க துவங்கினர். இதனால், ஸ்கோர் கிடுகிடுவென உயரத்துவங்கியது. பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது. இறுதியில் சுஷாந்த் 50 (39), கஜனந்த் 65 (42) இருவரும் ஆட்டமிழந்தனர். ஸ்கோர் 16/4 என்பதில் இருந்து 126/5 என மாறியது. இறுதியில் மார்டி கைன் 15 பந்துகளில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 39 ரன்களை தெறிக்கவிட்டார். இதனால், அமெரிக்க அணி 20 ஓவர்களில் 188/6 ரன்கள் குவித்து அசத்தியது.
அயர்லாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஓபனர் ஸ்டிர்லிங் 31 (15), ஒன்டவுன் பேட்ஸ்மேன் டக்கர் 57 (49) இருவரும் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தனர். அடுத்து யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 162/6 ரன்கள் எடுத்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
பாபர் அசாம் பெஸ்ட் பேட்ஸ்மேன்…ஆனா இதுல ரெண்டாவது இடம்தான்: ஷாஹீன் அப்ரீதி அதிரடி!
அமெரிக்க அணி 16/4 என்ற பரிதாப நிலையில் இருந்து, 126/5 என்ற நிலைக்கு முன்னேறி, அனுபவமிக்க அணியைப்போல் விளையாடியது. இனி வரும் காலகட்டங்களில் அது பெரிய அணிகளுக்கு எதிராகவும், சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.