ருதுராஜ் 1 ரன்னில் ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், ராபின் உத்தப்பா நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார். மொயின் அலி, சிவம் துபே, ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய துபே 49 ரன்களில் ஆட்டம் இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
220 ரன்களுக்கு மேலாக சென்னை அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கடைசி 2 ஓவரில் மூன்று விக்கெட்களை இழந்ததன் காரணமாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி 210 ரன்களை எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: தோனிதான் ரன் அடிக்கிறார் என்றால் சிஎஸ்கே பேட்டிங்கில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்- ஆகாஷ் சோப்ரா
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இமாலய ஸ்காரை நோக்கி லக்னோ அணி விளையாடியது. கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு சென்னை அணிக்கா அல்லது லக்னோ அணிக்கா என்று கணிக்க முடியாத அளவுக்கு லக்னோவின் பேட்டிங் இருந்தது. இந்நிலையில், 40 ரன்களின் கே.எல்.ராகுல் வெளியேறினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 61 ரன்களில் ஆட்டம் இழந்தார். டி காக் அடித்த பந்தை கேச் பிடித்த டோனிக்கு இது டி20 போட்டியில் அவரது 200வது கேட்ச்சாக அமைந்தது.18வது ஓவர் முடிவில் லக்னோ 177 ரன்களை எடுத்திருந்தது. 19வது ஓவரை வீசிய சிவம் தூபே முதல் பந்திலேயே 6 ரன்களை விட்டுகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை அவர் விட்டுகொடுத்தார். இதையடுத்து ஆட்டம் சென்னை அணியின் கையைவிட்டு நழுவியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், 3 பந்துகளை மீதம் வைத்து லக்னோ அணி வெற்றி இலக்கை எட்டியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.