பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று விட்டாலும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக, உலக கிரிக்கெட் குறித்து அவ்வப்போது சில தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த கனேரியாவிடம், 2021-ன் பெஸ்ட் டி20 XI அணியை கணித்து கூறும்படி நிரூபர் கேட்டார். கனேரியாவும் இதற்குப் பதிலளித்தார். அவரது அணியில் ஓபனர்களுக்கான இடம் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்றார். அடுத்த இரண்டு இடங்களுக்கு இங்கிலாந்தில் லியம் லிவிங்ஸ்டன், ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் ஆகியோரை தேர்வுசெய்துள்ளார்.

6,7 ஆகிய இடங்களில் இந்திய ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பரீத் பும்ரா, ஷாஹீன் அப்ரீதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இருக்கிறார்கள். ஸ்பின்னராக ஆடம் ஜம்பா உள்ளார். இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு 12ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ன் பெஸ்ட் XI அணி (கனேரியா கணிப்பு): முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், மிட்செல் மார்ஷ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பரீத் பும்ரா, ஷாஹீன் அப்ரீதி, டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா.
12ஆவது வீரர்: ரிஷப் பந்த்.