மேலும், இந்த பிட்ச்களில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தொடர்ந்து 150 வேகத்தில் பந்துகளை வீசுவார்கள் என்பதால், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை அதிகம் ஆடி பழக்கப்பட்ட இந்திய அணி படுமோசமாக திணற வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை நினைத்து பயப்படுகிறேன் என தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டீன் எல்கர் பேசியுள்ளார்.
IND vs SA: ‘முதல் டெஸ்ட்’..தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்: வாய்ப்பு பிரகாசம்!
எல்கர் பேட்டி:
“ஜஸ்பரீத் பும்ர நிச்சயம் கடும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் பும்ராவின் பந்துவீச்சிற்கு நிச்சயம் சாதகமாகவே இருக்கும். இந்திய அணியில், அவரால் மட்டும் தான் தென்னாப்பிரிக்கா பிட்ச்களுக்கு ஏற்றவாறு பந்துவீச முடியும். இந்திய அணியும் கடந்த மூன்று வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “எங்கள் சீனியர் வீரர்கள் பலர், தற்போது இல்லாததால் இந்த தொடர் எங்களுக்கு கடும் சவாலானதாக இருக்கும். இருப்பினும், இந்திய அணியை சமாளிக்க தேவையான திட்டங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. எந்த ஒரு தனி நபரையும் சார்ந்து இல்லாமல் கூட்டு முயற்சியில் வெற்றிபெற திட்டங்களை தயாராக வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான தனிப்பட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.