அடுத்துக் களமிறங்கிய லக்னோ அணியில் கே.எல்.ராகுல் (40), குவின்டன் டி காக் (61) ஆகியோர் அபாரமாக துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அடுத்து எவின் லிவிஸ், ஆயுஸ் பதாரோடி ஆகியோர் களத்தில் இருந்தபோது, 12 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அந்த சமயத்தில் ஷிவம் துபே பந்துவீச வந்தார். அந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், இரண்டு ஒய்ட், இரண்டு பவுண்டரிகள் சென்றதால் 25 ரன்கள் கசிந்தது. அடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லக்னோ 3ஆவது பந்திலேயே துரத்தி வெற்றிபெற்றது.
தோல்விக்கு காரணம்:
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பந்துவீச்சு துறைதான். டுவைன் பிராவோவை தவிர மற்ற யாரும் சிறப்பாக செயல்படுவது கிடையாது. முகேஷ் சௌத்ரி, ஷிவம் துபே போன்ற படுமோசமாக சொதப்பி வருகிறார்கள். தீபக் சஹார் வந்தால் மட்டுமே பவர் பிளே, டெத் ஓவர்களில் எதிரணிக்கு பயம் காட்ட முடியும். இதனால், தீபக் சஹார் எப்போது வருவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோரு காத்திருக்கிறார்கள்.
புது தகவல்:
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இருக்கும் தீபக் சஹாருக்கு இன்னும் காயம் குணமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரமே பந்துவீச துவங்கிவிட்டார் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு இன்னமும் காலில் காயம் இருப்பதால், தற்போது ஓய்வில் இருக்கிறாராம். மேலும், ஒரு மாதம் வரை அவர் சிஎஸ்கேவில் இணைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.