வெப் தொடரில் தனுஷை நிறத்தின் அடிப்படையில கேலி செய்ததை பார்த்த நடிகை ரம்யா அதை கண்டித்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

தனுஷ்

கோலிவுட்டில் ஆரம்பித்த தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். விருதுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷை நிறத்தின் அடிப்படையில் கேலி செய்திருக்கிறார்கள். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லிட்டில் திங்ஸ் தொடரில் தான் தனுஷை கிண்டல் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

ரம்யா

தனுஷை கிண்டல் செய்த காட்சியை பார்த்த நடிகை ரம்யா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, வடக்கு மற்றும் தெற்கு என்று பிரித்துப் பார்த்து, கேலி செய்வதை நிறுத்த வேண்டும். இது கூல் இல்லை. இது 2021. பிற நாடுகளில் இருக்கும் இன வெறி பற்றி இந்தியர்கள் பேசுகிறார்கள். முதலில் நாம் ஒழுங்காக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன்

தனுஷின் பொல்லாதவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரம்யா. அதில் இருந்து அவரும், தனுஷும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனுஷை கிண்டல் செய்து வந்த காட்சியை பார்த்த ரம்யாவால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. ரம்யாவின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்

தனுஷை கலாய்த்திருக்கும் காட்சியை பார்த்த அவரின் ரசிகர்களோ, அந்த வசனத்தை பேசி சிரிக்கும் நடிகர்கள், நடிகை யார் என்றே பலருக்கும் தெரியாது. ஆனால் உலக அரங்கில் பெயர் பெற்றவர் தனுஷ். அவர் வாங்கிய விருதுகளை பாருங்கள். அவரை போன்று உங்களால் நடிக்க முடியுமா என்று விளாசியுள்ளனர்.

Twitter-Cine bae