ஹைலைட்ஸ்:

  • ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற தனுஷ்
  • ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் கோலிவுட் நடிகர் தனுஷ்

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். அண்மையில் தான் ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டு நாடு திரும்பினார்.

தனுஷ் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது. ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் இந்த சாதனை குறித்து அவரின் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இதற்கிடையே வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை #7YearsOfBlockBusterVIP என்கிற ஹேஷ்டேகுடன் ரசகிர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் இப்படி ஒரு சாதனை படைத்திருக்கிறார்.

இந்த நாள் தனுஷ், ‘விஐபி’க்களால் மறக்கவே முடியாத நாள்இன்ஸ்டாகிராமில் தனுஷை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2.8 மில்லியன் ஆகும். கெரியரை பொறுத்தவரை கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இருவரும் பத்திரிகையாளர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. அந்த படத்திற்கு நானே வருவேன் என்று தலைப்பு வைத்து அறிவித்தார்கள். இந்நிலையில் படத்தின் தலைப்பை ராயன் என்று மாற்றியிருக்கிறார்கள்.

தலைப்பு மட்டும் அல்ல கதையும் மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. ராயன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.