dhoni

தோனி தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கலாம் ஆனால் அது அவரை சிறிதும் குறைக்கவில்லை. ஏற்கனவே முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தனது நேர்மை முத்திரையை பதித்து விட்டார். பேட்டிங் உண்மையில் நன்றாக ஆடுகிறார், ரிலாக்ஸ்டாக ஆடுகிறார். அவருக்கான ஸ்லாட்டில் பந்து விழுந்தால் சிக்ஸ் என்பதில் இன்னும் தெளிவாக இருக்கிறார், துல்லியமாக இருக்கிறார், மற்றபடி அவரால் ஆட முடியாத பந்துகள் என்பது அவரால் ஆரம்ப நாட்களிலும் ஆட முடியாத பந்துகள்தாம், அதுவும் அப்படியே தொடர்கின்றது.சீசனின் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, தோனி பிரமாதமன அரை சதத்துடன் தொடங்கினார், இரண்டாவது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக, அவர் ஒரு சுருக்கமான ஆனால் பொழுதுபோக்கு இன்னிங்ஸில் தனது பிக் ஹிட்டிஉங் திறன்களைக் காட்டினார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். நேற்று பேட்டிங்கில் சிறந்து விளங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் பஞ்சாப் கிங்ஸின் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த ஜான்டி ரோட்ஸைப் பெருமைப்படுத்தும் ஒரு அற்புதமான ரன் அவுட் மூலம் அவர் தனது தடகளத் திறனை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் இடையேயான மோதலின் போது மற்றொரு தருணம் ட்விட்டர்வாசிகளின் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்தது. PBKS இன்னிங்ஸின் எட்டாவது ஓவரின் போது, லியாம் லிவிங்ஸ்டன், டிவைன் பிரிட்டோரியஸ் பந்தை ஃபைன் லெக்கில் திருப்பி விட முயன்றார். அப்போது எட்ஜ் ஆனது, தோனி டைவ் அடித்து கேட்ச் எடுத்தார்.

ஆனால் தான் கேட்ச் எடுத்துவிட்டதாக கொண்டாட மறுத்த தோனி களநடுவர்களிடம் மேல்முறையீடு செய்து பந்து தரையில் படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று மிக நேர்மையாகக் கேட்டது ரசிகர்களின் நெகிழ்ச்சிக்குக் காரணமானது. ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு வந்தது தெரியவர லிவிங்ஸ்டன் நாட் அவுட் என்பதோடு அவர் அடித்த அரைசதம் சிஎஸ்கேவுக்கே குழி தோண்டியது என்பதுதான் உண்மை. உடனே தோனி ரசிகர்கள் ட்விட்டர் கணக்கில் விசைப்பலகையின் பொத்தான்களை சொடுக்க ஆரம்பித்து புகழ்ந்து தள்ளி விட்டனர்.

எல்லோரும் நேர்மை நேர்மை என்று புகழ்ந்து தள்ளினர். ஆனால் இதே போட்டியில் நேற்று இன்னொரு தருணம், தோனி அவுட் ஆன தருணம், ராகுல் சாஹர் வீசிய பந்து ஒன்று கூக்ளியாகி லெக் ஸ்டம்புக்கு வெளியே எங்கோ சென்றது, தோனி அதை அப்படியே பந்து செல்லும் வழியிலேயே தட்டி விட்டு ஒரு எளிதான பவுண்டரிக்கு முயன்றார், ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டதை விக்கெட் கீப்பர் ஜிதேஷ் அபாரமாகப் பிடித்தார். களநடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் 200% அது எட்ஜ்தான் என்றார், ஒரு விக்கெட் கீப்பருக்குத் தெரிவது பேட்ஸ்மெனுக்குத் தெரியாதா? கிரிக்கெட்டில் பேட்ஸ்மெனுக்கு தெரியாத எட்ஜ் என்பது இல்லை.

பொதுவாக அப்படி எட்ஜ் ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி தானே அவுட் என்று நடுவர் தீர்ப்புக்கு காத்திருக்காமல் செல்வார் தோனி. அதில் தோனி இன்னொரு கில்கிறிஸ்ட் தான் ,ஆனால் நேற்று இந்த எட்ஜுக்கு அவர் வெளியேறவில்லை, தேர்ட் அம்பயர் முடிவுக்காகக் காத்திருந்தார். இதை நேர்மையின்மை என்று கூறுவதற்கில்லை ஆனால் ஒருபுறம் நியாயமான சந்தேகம்- பந்து தரையில் பட்டதா என்று- ரெஃபர் செய்தார், இன்னொரு புறமும் பந்து மட்டையில் படவில்லையோ என்ற சந்தேகத்திலும் நேர்மை இருந்ததாகவே கூற முடியும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.