அணித் தேர்வு:
மீண்டும் முழு பார்முக்கு திரும்பும்வரை தேசிய கிரிக்கெட் அகடமியிலேயே முகாமிடவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடருக்கு தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என பிசிசிஐக்கு ஹார்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. பிசிசிஐயும் இதனை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடருக்கும் தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என ஹார்திக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த பதில் பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே அவருக்கு போட்டியாக ஷர்தூல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் வளர்ந்து வரும் நிலையில், இப்படி நீண்ட ஓய்வு கேட்டிருக்க கூடாது எனவும், அவர் நிச்சயம் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு திரும்பி, அவர் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் ஒரே முடிவில் இருக்கிறார்களாம். இதனை அவர் ஏற்கவில்லை என்றால், அடுத்தமுறை பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் அவரது பெயரை நீக்கிவிட வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ விதிமுறைப்படி, ஒப்பந்த வீரர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.