இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்டம் முடிந்ததும் உடனே கிளம்பி விட்டார். ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) இருந்து வெளியேறி உள்ள ஹர்ஷல் பட்டேல் நாளை நடக்கும் சென்னைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக அணியுடன் மீண்டும் இணைந்து விடுவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் அவர் 3 நாள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவார் என்று தெரிகிறது. பல்வேறு அறிக்கைகளின்படி, 31 வயதான பந்துவீச்சாளர் தனது சகோதரியின் மரணத்தைப் பற்றி அறிந்தவுடன் RCB vs MI போட்டிக்குப் பிறகு புனேவில் அணி குமிழியை விட்டு வெளியேறினார். ஐபிஎல் 2021 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் இரண்டு ஆண்டுகளாக ஆர்சிபிக்கு நிலையான ஒரு வீரராகத் திகழ்கிறார். . சனிக்கிழமை கூட, அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஆனால் படேல் இப்போது RCB இல் எப்போது இணைவார் என்பது கேள்வியாகவே உள்ளது.
ஹர்ஷல் படேல் சகோதரி பெயர் அர்ச்சிதா படேல், இவருக்கு என்ன நோய், ஏன் இந்த அகால மரணம் போன்ற செய்திகள் இனிமேல்தான் வெளியே வர வேண்டும்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு நாளை 12ம் தேதி ஜடேஜா தலைமை சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது, சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்து இன்னும் முதல் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.