
டெல்லி கேப்பிடல்ஸ் பிரிதிவி ஷா
இந்நிலையில் பிரித்வி ஷா பற்றி பாண்டிங் கூறும்போது, “பிரிதிவி ஷா ஆடுவதைப் பார்க்கும் போது என்னிடம் நான் ஆடும்போது என்னென்ன திறமைகள் இருந்ததோ அத்தனையும் உள்ளதைப் பார்த்து அகமகிழ்ந்தேன். பிரிதிவி ஷாவை இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆடும் வீரராக நான் உருவாக்கி விட்டால் என் பணி முடிந்தது மனநிறைவுடன் நான் பணி செய்ததாக எனக்கு திருப்தி ஏற்படும்.
நான் சுற்றியிருக்கும் அணிகளைத் திரும்பிப் பார்த்தால், நான் மும்பை இந்தியன்ஸை பயிற்சியளித்த போது, ரோஹித் மிகவும் இளமையாக இருந்தார், ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை, க்ருனால் விளையாடவில்லை. நான் அங்கு பயிற்சியளித்த நிறைய வீரர்கள் இப்போது இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள், அதைத்தான் நான் இங்கே செய்ய விரும்புகிறேன்.” என்றார் ரிக்கி பாண்டிங்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.