இந்திய அணியின் இங்கிலாந்து பயணத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜூலை 1ம் தேதி கடந்த தொடரில் மீதமிருந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது, இது எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது, இந்த டெஸ்ட்டுக்குப் பிறகே அந்த டெஸ்ட் தொடரின் இறுதி நிலை என்னவென்று தெரியும், இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு அங்கு இரண்டு பயிற்சி டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதில்இன்கோரா கவுண்டி மைதானத்தில் டெர்பிஷைருக்கு எதிராக முதல் சுற்றுப்பயண ஆட்டத்தை விளையாடும். நார்தாம்ப்டன் கவுண்டி மைதானத்தில் 2வது பயிற்சி ஆட்டம் நடைபெறும்.
சுற்றுப்பயண விவரம்:
இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் – ஜூலை 1-5.
டி20 தொடர்:
முதல் போட்டி – ஏஜியஸ் பவுல் – ஜூலை 7
2வது போட்டி – எட்ஜ்பாஸ்டன் – ஜூலை 9
3வது போட்டி – ட்ரெண்ட் பிரிட்ஜ் – ஜூலை 10
ஒருநாள் தோடர்:
முதல் ஒருநாள் கியா ஓவல் – ஜூலை 12
2வது ஒருநாள் – லார்ட்ஸ், ஜூலை 14,
3வது ஒருநாள் எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராபர்ட் – ஜூலை 17
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.