Dinesh karthick shahbaz ahmed

ஐ.பி.எல் 2022 தொடரின் 13-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெயஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்.பட்லர், படிக்கல் இணை நிதானமாக ஆடியது. அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்த நிலையில் படிக்கல் ஆட்டமிழந்தார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 8 ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் பட்லர் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. வழக்கமாக அதிரடியாக ஆடும் பட்லர் இந்தமுறை நிதானமாகவே ஆடினர். ஹெட்மயரும் நிதானமாக ஆடினர். 40 பந்துகளில் 43 ரன்கள் என்றிருந்தநிலையில், பட்லர் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும், 20-வது ஓவரில் சிக்ஸர்களும் அடித்துஅசத்தினார்.

ஹெட்மயரும் அவரது பங்குக்கு இறுதி பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார். அதன்மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 169 ரன்கள் குவித்தது.

அதனையடுத்து, களமறிங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளஸிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் டூப்ளஸிஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராவத்தும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கோலி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர், டேவிட் வில்லே ரன் ஏதும் எடுக்காமலும், ரூதர்போர்டு 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரில் அதிரடி – 169 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி

12 ஓவரில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி. ஆட்டம் முழுவதும் ராஜஸ்தான் அணியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. அப்போது, ஷாபாஷ் அகமதுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். தொடக்கம் முதலே அதிரடியைக் காட்டினார் தினேஷ் கார்த்திக். அஸ்வின் வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என அதிரடியைக் காட்டினார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் ஷாபாஸ் அகமதுவும் அதிரடியைக் காட்டினார்.

இருவரும் மாறி மாறி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய ஷாபாஸ் அகமது 26 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் அணியின் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.